சென்னைக்கு திரும்பிய நடிகர் விஜய் | தனுஷ் நடித்து இயக்கும் புதிய படம் | சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் டி.ராஜேந்தர் | இளையராஜா ரிகர்சலுக்கு வந்த ரஜினிகாந்த்: கைதட்டி பாடல்களை ரசித்தார் | சமந்தாவுடன் இணைந்து நடித்த படம்: மலரும் நினைவுகளை பகிர்ந்த நாகசைதன்யா | நயன்தாராவுக்கு சாப்பாடு ஊட்டிவிடும் விக்னேஷ் சிவன் | விக்ரம் பிரபு நடிக்கும் ‛ரத்தமும் சதையும்' | பேஷன் ஷோ ஸ்டைல் வாக் புகைப்படங்களை வெளியிட்ட மாளவிகா மோகனன் | சண்டைக் காட்சியின்போது விபத்தில் சிக்கிய விஜயதேவரகொண்டா- சமந்தா | மலையாள இசை அமைப்பாளர் காலமானார் |
கன்னட முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் மறைவுக்கு முன் வெளியான படம் யுவரத்னா. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான இப்படத்தை சந்தோஷ் ஆனந்த்ராம் இயக்கியிருந்தார். படம் நல்ல வரவேற்பை பெற்றது.
புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்து முடித்துள்ள படம் ஜேம்ஸ். இதனை சேத்தன் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் புனித் ராஜ்குமார் ராணுவ வீரராக நடித்திருக்கிறார். குடியரசு தினத்தை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
அதில் புனித் கம்பீரமாக ராணுவ வீரராக நடந்து வரும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த படத்தை பார்த்து அவரது ரசிகர்கள் கண்ணீர் கசியும் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். இப்படத்தில் புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார்.