குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் (46) திடீர் மாரடைப்பால் காலமானார். அவரின் மறைவு கன்னட திரையுலகினரை மட்டுமல்லாது தென்னிந்திய திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. நேற்று முன்தினம் கூட நன்றாக நடனம் ஆடியவர் காலையில் உடற்பயிற்சி செய்தவர் இப்போது இல்லையே என எண்ணும் போது வாழ்க்கை எவ்வளவு நிச்சயமற்றது என்பதை பலரையும் உணர வைத்துள்ளது. புனித் ராஜ்குமார் மறைவுக்கு மொழி கடந்து திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கமல் இரங்கல்
நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன் டுவிட்டரில், ‛‛அன்புத் தம்பி புனித் ராஜ்குமாரின் மரணச் செய்தி வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கன்னடத் திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என பதிவிட்டுள்ளார்.
அஜித் இரங்கல்
நடிகர் அஜித் - ஷாலினி தம்பதியர் வெளியிட்ட இரங்கல் செய்தி : ‛‛புனித் ராஜ்குமாரின் துரதிர்ஷ்டமான மறைவு செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் இந்த துயரத்தில் இருந்து மீள வலிமை கிடைக்க வேண்டுகிறோம்'' என தெரிவித்துள்ளனர். இந்த இரங்கல் செய்தியை அஜித்தின் மக்கள் தொடர்பாளர் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
விஜயகாந்த் இரங்கல்
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் டுவிட்டர் மூலம் வெளியிட்ட இரங்கல் செய்தி : கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் திடீர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளது என்னை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மறைந்த கன்னட சினிமா சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் அவர்கள் என் மீது மிகுந்த அன்பும் பாசமும் காட்டியவர். அந்த வகையில் அவர்களின் குடும்பத்தினர் அனைவருடன் எனது நட்பு தற்போதும் தொடர்ந்து வருகிறது. புனித் ராஜ்குமார் மரணம் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு, உற்றார் உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு, கன்னட திரையுலகினருக்கு, ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.