Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புனித் ராஜ்குமார் மறைவு : பல மொழிக் கலைஞர்கள் இரங்கல்

29 அக், 2021 - 20:39 IST
எழுத்தின் அளவு:
Celebrities-condolence-to-puneeth-rajkumar-all-over-india

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் 46 வயதிலேயே அகால மரணமடைந்தது இந்தியத் திரையுலகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. புனித் ராஜ்குமார் கன்னட நடிகர் என்றாலும் அவரது அப்பா மறைந்த ராஜ்குமார் காலத்திலிருந்தே பல மொழி திரைக்கலைஞர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள்.

அதனால், புனித்தின் திடீர் மறைவு கன்னடத் திரையுலகத்தை மட்டுமல்லாது, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தித் திரையுலகத்தினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பலரும் புனித் மறைவுக்கு அதிர்ச்சியும், ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ்த் திரையுலகில் நடிகர்கள் சரத்குமார், விஷால், ஆர்யா, தனுஷ், நாசர், சித்தார்த், விக்ரம் பிரபு, ஆதி, கௌதம் கார்த்திக், சாந்தனு,

மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், துல்கர் சல்மான், நிவின்பாலி, வினீத் சீனிவாசன், டொவினோ தாமஸ், சுரேஷ் கோபி,

தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, மகேஷ் பாபு, ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ரவி தேஜா, அல்லரி நரேஷ், ஜெகபதி பாபு, மனோஜ் மஞ்சு, நாக சௌரியா, ராம் பொத்தினேனி, சாய்குமார்,

ஹிந்தி நடிகர்கள் அபிஷேக் பச்சன், அஜய் தேவகன், சோனு சூட், அர்மான் மாலிக், சுனில் ஷெட்டி,

நடிகைகள் ராதிகா, ரோஜா, சிம்ரன், த்ரிஷா, ஹன்சிகா, காஜல் அகர்வால், லட்சுமி மஞ்சு, ரகல் ப்ரீத் சிங், நிக்கி கல்ரானி, ராஷி கண்ணா, ஆத்மிகா, அதிதி ராவ் ஹைதரி,

கிரிக்கெட் வீரர்கள் அனில் கும்ப்ளே, வெங்கடேஷ் பிரசாத், வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, விவிஎஸ் லட்சுமண், இன்னும் பல அரசியல் கட்சித் தலைவர்கள், மாநில முதல்வர்கள், பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
புனித் ராஜ்குமார் மறைவு - கமல், அஜித், விஜயகாந்த் இரங்கல்புனித் ராஜ்குமார் மறைவு - கமல், அஜித், ... நண்பர் ரஜினி விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் - கமல் நண்பர் ரஜினி விரைவில் குணமாகி வீடு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

s t rajan - chennai,இந்தியா
30 அக், 2021 - 15:02 Report Abuse
s t rajan உண்மையிலேயே புனிதர். 45 இலவச பள்ளிகள் 26 ஆதரவற்றோர் விடுதிகள் 16 முதியோர் இல்லங்கள் 19 பசு பாதுகாப்பு சாலைகள் 1800 பேருக்கு இலவச கல்வி வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் உதவி செய்ய உத்திரவாதம். இறுதியில் தன் இரண்டு கண்களும் தானம் என்று பொது சேவையில் எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி தன்னை ஈடுபத்திக்கொண்டு சாதித்த திரு புனீத் ராஜ்குமார் அவர்களைப் போல ஒரு நிஜமான சினிமா சூப்பர் ஸ்டாரை, தொண்டுள்ளம் நிறைந்த அரசியல்வாதியைத் தமிழகம் கண்டதுண்டா? வயதில் சிறியவராக இருந்தாலும் இவரல்லவோ உண்மையான பெரியார். தெய்வத்துள் வாழ்வாங்கு வாழ்வார். பணம் இருந்து ப்ரயோஜனம் இல்லை. இவரைப் போல நல்ல மனம் நமக்கு இறைவன் அருள வேண்டும். உண்மையான பாரத ரத்னா நம் தமிழகத்தில், சினிமாவை வைத்து சம்பாதிக்கவும், எந்தத் தகுதியுமின்றி அரசியலில் புகுந்து மேலும் கொள்ளை யடிக்க மட்டுமே முயல்கிறார்கள் என்று, என்று நம் மக்கள் உணர்கிறார்களோ, அன்றே தமிழகத்திற்கு நிஜமான விடியல் ஏற்படும். புனித இராஜ் குமார் இறவாது வாழ்வார் அன்பர் இதயங்களில்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in