இத்தனை வயதிலும் பிகினியில் அசத்தும் ஸ்ரேயா | நான் உயிர் உள்ள மனுஷி - சாய் பல்லவி | மீண்டும் புத்துயிர் பெறும் 'சங்கமித்ரா' | சினிமாவில் வெற்றி தான் முக்கியம் : மணிகண்டன் | நீக் படத்திற்கு எஸ்.ஜே.சூர்யா விமர்சனம் : தனுஷ் நன்றி | முதல் 3 நாட்களில் 12 கோடி வசூலித்த கங்கனாவின் 'எமர்ஜென்சி' | 2025ல் ராஷ்மிகாவின் முதல் படம் பிப்ரவரி 14ல் வெளியாகிறது! | பிரேமலு 2ம் பாகம் அப்டேட் | காதலியை மணந்தார் இயக்குனர் அஜய் ஞானமுத்து | கவுதம் மேனன் இயக்கத்தில் ரவி மோகன் |
விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தின் கதாநாயகியான பூஜா ஹெக்டே தற்போது மும்பையில் வசித்து வருகிறார். அங்கு புதிய வீடு ஒன்றை வாங்கி நேற்று கிரகப்பிரவேசம் செய்து குடி புகுந்துள்ளார்.
அது குறித்து தன்னுடைய சமூகவலைதளத்தில், “ஒரு வருடமாகக் காத்திருந்த இன்றைய நன்னாள், அனைத்து கனவுகளும் நிறைவேறியது. உங்கள் மீது நம்பிக்கை வைத்து கடினமாக உழைக்கவும். இந்த பிரபஞ்சம், பிடிவாதமான மனதின் மீது காதலில் விழுகிறது,” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
கடந்த வருடம் மும்பை பாந்த்ரா பகுதியில் கடலைப் பார்த்தபடி இருக்கும் 3 படுக்கையறை கொண்ட அபார்ட்மென்ட் ஒன்றை வாங்கினார். படங்களில் நடித்து அவர் வாங்கிய சம்பளத்தைக் கொண்டு வாங்கியதால் அந்த அபார்ட்மென்ட்டின் இன்டீரியரை அவரே முன்னின்று செய்துள்ளார்.
தென்னிந்திய நடிகைகள் பலரும் தற்போது ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார்கள். பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா அதில் முன்னணியில் இருக்கிறார்கள். சமந்தா, அமலா பால் ஆகியோர் ஹிந்தி வெப் தொடர்களில் நடித்துள்ளார்கள்.
பிரபாஸுடன் பூஜா நடித்துள்ள 'ராதேஷ்யாம்' பான் இந்தியா படமாக வெளிவர உள்ளது. விஜய்யுடன் பூஜா நடித்துள்ள 'பீஸ்ட்', சிரஞ்சீவியுடன் தெலுங்கில் நடித்துள்ள 'ஆச்சார்யா' ஆகிய படங்கள் வெளிவந்தால் பூஜா மூன்று மொழிகளிலும் மேலும் முன்னணி இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது.