பார்த்திபன் இயக்கும் படத்தில் ‛லப்பர் பந்து' ஹீரோயின் | காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் |
ஜெயம் படம் மூலம் இயக்குனராக தமிழில் அறிமுகமானவர் இயக்குனர் மோகன்ராஜா.. அதனாலேயே நீண்ட நாட்களாக தனது தம்பியை போல ஜெயம் ராஜா என்கிற அடையாளத்துடனேயே வலம் வந்த மோகன்ராஜா, முதலில் தெலுங்கில் ஹனுமான் ஜங்சன் என்கிற படத்தை தான் இயக்கினார். அந்தப்படம் 2001ல் வெளியானது. அதற்கு முன்னதாக 1997ல் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான ஹிட்லர் உட்பட சில படங்களில் தெலுங்கி உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார் மோகன்ராஜா,
கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு பிறகு தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் காட்பாதர் என்கிற படத்தையே இயக்கி வருகிறார் மோகன்ராஜா. ஹிட்லர் பட நூறாவது நாள் விழாவில் சிரஞ்சீவிக்கு மோகன்ராஜா மாலை அணிவிக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவரது தம்பி ஜெயம் ரவி, “என்ன ஒரு அருமையான பயணம் அண்ணா” என நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார்.