ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் கேபி. தற்போது விஜய் டிவியின் 'ஈரமான ரோஜாவே' சீசன் 2 வில் கதாநாயகியாக இருக்கிறார். சிறந்த நடன கலைஞராக இருக்கும் கேபி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் நடிப்பார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் சீரியலில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார்.
இந்நிலையில் சமூகவலைதளத்தில் கேபியுடன் கமெண்டில் பேசிய ஒருவர், 'நீங்கள் சினிமாவில் நடிக்கலாமே, ஏன் சீரியல் மாதிரியான சின்ன ஊடகத்தில் நடிக்கிறீர்கள்' என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த கேபி, 'சீரியலை சின்ன விசயமாக நினைக்கவில்லை. சின்னத்திரையோ, வெள்ளித்திரையோ, ஒரு நடிகராக நாம் பணியில் சிறப்பாக செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரின் வீட்டிற்கு சென்று விசிட் செய்யும் சின்னத்திரை ஒன்றும் சின்ன விசயமல்ல' என்று பதில் கூறியுள்ளார்.
அதே கேள்வியை மீண்டும் ஒரு ரசிகர் கேட்க, கடுப்பான கேபி, 'இன்னொருவரும் இதே கேள்வியை கேட்டாலோ, இதுகுறித்து சிரித்தாலோ, உங்க கிட்ட நான் கருத்து கேட்டேனா? உங்க வேலைய பத்தி நான் கமெண்ட் பன்றேனா? வாழ விடுங்க' என காட்டமாக பதில் அளித்துள்ளார்.