என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

தெலுங்குத் திரையுலகத்தில் அடுத்தடுத்து சில பல பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாக உள்ளன. கடந்த வாரம் வெளியாக வேண்டிய பிரம்மாண்டப் படமான 'ஆர்ஆர்ஆர்' படத்தை, கொரோனா காரணத்தைக் காட்டி வெளியீட்டைத் தள்ளி வைத்தார்கள். ஆனால், அது உண்மைக் காரணமல்ல, ஆந்திராவில் டிக்கெட் விலைகைளை கடுமையாகக் குறைத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்திலேயே படத்தைத் தள்ளி வைத்ததாகவும் ஒரு தகவல் இருக்கிறது.
ஆந்திர அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சினிமா தியேட்டர் கட்டணங்களை அதிரடியாகக் குறைத்தது. திரையுலகினரின் வேண்டுகோளுக்கும் அது செவி சாய்க்கவில்லை. இதனால், பெரிய பட்ஜெட் படங்கள் வசூலைக் குவிக்க பெரும் தடுமாற்றமாக உள்ளது.
இந்நிலையில் தெலுங்குத் திரையுலகத்தின் பிரபல இயக்குனரான ராம்கோபால் வர்மா, ஆந்திர சினிமாட்டோகிராபி அமைச்சர் பெர்னி வெங்கட்ராமையாவைச் சந்தித்துப் பேசினார். பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு நிருபர்களைச் சந்தித்த வர்மா டிக்கெட் பிரச்சினை குறித்த ஆந்திர அரசின் நிலை குறித்து விமர்சித்துப் பேசினார்.
இன்று சமூகவலைதளத்தில் “வட இந்தியாவில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் டிக்கெட் விலை 2200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 'ஆர்ஆர்ஆர்' படத்திற்கான டிக்கெட் விலை 2200க்கு விற்க அம்மாநில அரசு அனுமதி அளிக்கும் போது, சொந்த மாநிலமான ஆந்திராவில் 200 ரூபாய்க்குக் கூட விற்க அனுமதியில்லையா ?. 'கட்டப்பாவை யார் கொன்றது என்ற பரிதாபமான கேள்வியைக் கேட்க வைக்கிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
 
           
             
           
             
           
             
           
            