'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. | ஆடை வடிவமைப்பாளரை 2வது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் |
கொரோனா மூன்றாவது அலை 'ஒமிக்ரான்' அலையாக கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி வருகிறது. சில மாநிலங்களில் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே என்ற அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகிறது.
நாட்டின் தலைநகரான டில்லியில் தியேட்டர்களை முழுவதுமாக மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. டில்லியில் சுமார் 90 தியேட்டர்கள் உள்ளன. அவற்றில் முக்கிய மல்டிபிளக்ஸ் தியேட்டர்களும் அடங்கும். தியேட்டர்கள் மூடல் எவ்வளவு நாளைக்கு என்பது பற்றி மாநில அரசு அறிவிக்கவில்லை.
இதன் காரணமாக ஜனவரி 7ம் தேதி வெளியாக உள்ள 'ஆர்ஆர்ஆர்', ஜனவரி 14ம் தேதி வெளியாக உள்ள 'ராதேஷ்யாம்' ஆகிய படங்கள் பாதிக்கும் சூழ்நிலை வந்துள்ளது. அடுத்த பத்து நாட்களுக்குள் மேலும் சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டால் இரவுக் காட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும். இன்னும் சில மாநிலங்களில் 50 சதவீத இருக்கை அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த வாரம் வெளியாவதாக இருந்த 'ஜெர்ஸி' படத்தை படக்குழுவினர் தள்ளி வைத்துவிட்டார்கள். பொங்கலை முன்னிட்டும் பலர் படங்களை வெளியிட தயாராக இருக்கிறார்கள். தற்போது பரவி வரும் கொரோனா அலை என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தப் போகிறதென்பது இனிமேல் தான் தெரிய வரும்.