பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் | பிளாஷ்பேக் : வாய்ப்புக்காக பிச்சைக்காரர் தோற்றத்திற்கு மாறிய ஜெமினி கணேசன் | இந்த வாரமும் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் | காந்தாரா பாணியில் உருவாகும் 'கரிகாடன்' |

கடந்த சில மாதங்களாகவே சமந்தா எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தான் அடிக்கடி ஹாட் டாபிக்காக மீடியாக்களில் பேசப்பட்டு வருகிறது. பேமிலிமேன்-2 சர்ச்சை, கணவருடன் திருமண முறிவு என பிரச்சனைகள் சுழன்றடித்தாலும் அவற்றை எல்லாம் மறப்பதற்காக அவ்வப்போது நண்பர்களுடன் டூர் கிளம்பி விடுகிறார் சமந்தா. சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு தான் ஆடிய நடனம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற சந்தோஷத்தில் தற்போது கேரளாவுக்கு விடுமுறையை கழிக்க கிளம்பி சென்றுள்ளார் சமந்தா.
கேரளாவில் ஆழப்புழாவில் தங்கியுள்ள அவர், தான் தங்கியிருக்கும் போட் ஹவுஸில் இருந்து இயற்கை காட்சியை ரசிப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு முன்னதாக 2014 ல் அவர் ஆலப்புழா சென்றிருந்தார். அதைவிட முக்கியமான விஷயம் அவரும் நடிகர் நாகசைதன்யாவும் இதே ஆழப்புழாவில் 2010ல் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ஏ மாயா செசாவே என்கிற படத்தில் நடித்தபோதுதான் காதல் வசப்பட்டனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.