போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன் | இணையதள தேடல் : தீபிகா படுகோன் | உணவு கூட தராமல் கொடுமைப்படுத்தினர் : விஷால் பட ஹீரோயின் மீது பணிப்பெண் பரபரப்பு புகார் | கேமரா என்னை அழைக்கிறது : படப்பிடிப்புக்கு திரும்பினார் மம்முட்டி | பிளாஷ்பேக் : நிஜமான குத்துச்சண்டை காட்சி இணைக்கப்பட்ட படம் | காந்தாரா சாப்டர் 1 : முதல் நாளில் 100 கோடியை கடக்குமா? | லண்டனில் மாஸ்டர் டிகிரியை முடித்த திரிஷ்யம் சின்னப்பொண்ணு | என் மூளையில் இருந்து லோகா கதையை திருடி விட்டார்கள் : இயக்குனர் வினயன் | காந்தார சாப்டர் 1ல் நடித்தது பெருமை : சம்பத் ராம் | இளையராஜா பேரன் யதீஷ்வரின் இசை ஆல்பம் : ரஜினி, கமல் வெளியிட்டனர் |
வளர்ந்து வரும் தெலுங்கு நடிகை ஹம்சா நந்தினி. மகாராஷ்டிராவை சேர்ந்தவர். அத்தாரிண்டிகி தாரேதி, ராமையா வஸ்தவய்யா, லெஜண்ட், மிர்ச்சி, பாய், பெங்கால் டைகர்போன்ற படங்களில் நடித்துள்ளார். ஒரு பாடலுக்கு ஆடியும் உள்ளார்.
தற்போது அவர் மார்பக புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். நான்கு மாதங்களுக்கு முன்புதான், அவருக்கு மூன்றாம் நிலை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவர் குணமடைந்தாலும் மரபணு மூலம் வந்த புற்றுநோய் என்பதால் அவர் முழுமையாக அதிலிருந்து மீளவில்லை. தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நான்கு மாதங்களுக்கு முன்பு என்னுடைய மார்பகத்தில் ஒரு சின்ன கட்டி வந்தது. என் வாழ்க்கை முன்பு போல இருக்கப்போவதில்லை என எனக்கு அப்போதே தெரிந்துவிட்டது. 18 வருடங்களுக்கு முன்பு என் அம்மாவை ஒரு கொடிய நோய்க்கு பறிகொடுத்துவிட்டு இருட்டில் வாழ்த்துக் கொண்டிருந்தேன். நான் அதிகம் பயத்தில் இருந்தேன். மருத்துவ பரிசோதனையில் எனக்கு மூன்றாம் நிலை மார்பக புற்றுநோய் இருப்பது உறுதியானது. அறுவை சிகிச்சை மூலமாக கட்டி அகற்றப்பட்டது. எனக்கு பரவல் இல்லை என மருத்துவர்கள் அப்போது கூறினார்கள்.
ஆனால் அது குறைந்த காலம் மட்டுமே. அதன் பின் எனக்கு மீண்டும் புற்றுநோய் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான சிகிச்சை மிக தீவிரமானது. நான் தற்போது வரை 9 முறை கீமோதெரபி செய்து இருக்கிறேன். இன்னும் 7 முறை செய்ய வேண்டி இருக்கிறது. இந்த கொடிய நோய் என்னை சாகடிக்க அனுமதிக்க மாட்டேன். மீண்டு வந்து சினிமாவில் நினைத்ததை சாதிப்பேன். என்கிறார் ஹம்சா நந்தினி.