மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை | 'தக் லைப்' டிரைலர் : 24 மணி நேர சாதனை என்ன? |
கதாநாயகியை மையப்படுத்தி உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்த சமந்தா, அதேபோன்று தெலுங்கில் யசோதா என்கிற இன்னொரு படத்திலும் கதையின் நாயகியாக நடித்து வருகிறார். இரட்டை இயக்குனர்களான ஹரி மற்றும் ஹரிஷ் சங்கர் இயக்கும் இந்தப்படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக மலையாள நடிகரான உன்னி முகுந்தன் நடிக்கிறார்.
த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப்படத்தில் வரலட்சுமி சரத்குமாரும் இன்னொரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தற்போது நடைபெற்று வரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார் வரலட்சுமி.. தெலுங்கில் கடந்த வருடம் வரலட்சுமி நடித்த கிராக் மற்றும் நாந்தி என இரண்டு படங்களும் அவருக்கு ரசிகர்களிடம் பாராட்டை பெற்று தந்தன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.