ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி | தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி | சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் | ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது |
சின்னத்திரை ரசிகர்களை கவரும் வகையில் ஜீ தமிழ் மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் சர்வைவர் நிகழ்ச்சியை கொண்டு வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக இந்த நிகழ்ச்சி வரவேற்பு பெற்றது.
நடிகர் அர்ஜூன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் வெள்ளித்திரை நடிகர்கள் விக்ராந்த், நந்தா, பெசன்ட் ரவி, தம்பி ராமையாவின் மகன் உமாபதி , விஜயலட்சுமி, காயத்ரி ரெட்டி, சிருஷ்டி டாங்கே, வி.ஜே.பார்வதி உள்ளிட்ட மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
கடுமையான சவால்களை சமாளித்து முதல் 5 இடங்களில் உமாபதி, சரண், விஜயலக்ஷ்மி, லக்கி நாராயண், மற்றும் வெனஸ்ஸா க்ரூஸ் ஆகியோர் தேர்வாகினர். சர்வைவரின் கிராண்ட் பினாலே டிசம்பர் 12-ம் தேதி நடைபெற்றது. காண்போர் ஒவ்வொருவரின், இதயத்துடிப்பையும் அதிவேகமாக்கிய இறுதிச்சுற்றில், சவாலான போட்டியில் இறுதிவரை சரணும், விஜியும் சுமார் 70 நிமிடங்களுக்கு மேல் தாக்கு பிடித்தனர். நிகழ்ச்சியில் நடிகை விஜயலக்ஷ்மி தனிநபராக 'சர்வைவர்' பட்டத்தை வென்றதோடு, ரொக்கப்பரிசான ரூபாய் 1 கோடியையும் பெற்றார்.
மற்ற போட்டியாளர்களைப் போல, விஜயலக்ஷ்மியும் இந்த சீஸன் முழுவதும் பல்வேறு தோல்விகளையும், காயங்களையும் எதிர்கொண்டார், ஆனால் அவரது விடாமுயற்சி மற்றும் மன உறுதியுமே அவரை மீண்டும் போட்டிக்குள் உயிர்ப்புடன் தொடர உதவின. இந்த சீஸனின் பாதியில் அவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டு, 'மூன்றாம் உலகத்திற்கு' மாற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இருந்தபோதும், தனது அறிவுக்கூர்மை மற்றும் தளராத மன உறுதியை வெளிப்படுத்தி, மற்ற போட்டியாளர்களுக்கு கடும் சவாலாக அமைந்த விஜயலக்ஷ்மி, மூன்றாம் உலகத்தில் அனைத்து சவால்களிலும் வெற்றி பெற்று இறுதியாக சர்வைவர் பட்டத்தையும், ரூ.1 கோடி ரொக்க பரிசையும் வென்றார்.