ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' | நடிக்க வைப்பதை விட நடிப்பது கடினம் : பாலாஜி சக்திவேல் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடர் சின்னத்திரை ரசிகர்களின் விருப்பமான தொடராக உள்ளது. பல தடைகளையும் தாண்டி மீண்டும் மீண்டும் டிஆர்பியில் உச்சம் தொட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த பரீனா பிரசவத்தின் காரணமாக சீரியலை விட்டு விலகினார். ஆனால், சீக்கிரமே திரும்ப வருவேன் என்று கூறியிருந்தார். எனவே, அவரது கதாபாத்திரம் ஜெயிலுக்கு போய்விட்டது போல் காட்டப்பட்டு சில நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது.
இந்நிலையில் பரீனாவுக்கு ஆண் குழந்தை சமீபத்தில் பிறந்தது. பிரசவத்திற்கு பிறகு எப்படியும் அவர் நடிக்க வருவதற்கு சில மாதங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தற்போது பாரதி கண்ணம்மா ஷூட்டிங்கில் இணைந்து விட்டதாக புகைப்படங்களுடன் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதற்கிடையே பரீனா மீண்டும் நடிக்க வந்திருப்பதை கேள்விப்பட்ட ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலையில் துள்ளிக்குதித்து வருகின்றனர். மிக விரைவில் பரீனா நடிக்கும் எபிசோடுகள் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.