நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
கவனம்பெற்ற குறும்படங்களை இயக்கியவர் தாமோதரன் செல்வகுமார். இவர் இயக்கிய மூடர் என்ற குறும்படம் பல விருதுகளை பெற்றுள்ளது. தற்போது இவர் இயக்கி உள்ள திரைப்படம் ஆத்மிகா. ஆனந்த் நாக் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவர் வெற்றிவேல் படத்தில் சசிகுமாரின் தம்பியாக நடித்திருந்தார். இதுதவிர பிரேமம், நேரம் படங்களிலும் நடித்துள்ளார். சின்னத்திரை தொகுப்பாளர் ஐஸ்வர்யா நாயகியாக நடித்துள்ளார். இவர்கள் தவிர ஜீவா ரவி, பிர்லா போஸ் உள்பட பலர் நடித்துள்ளார்கள். கலைசக்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். சரண்குமார் இசையமைத்துள்ளார்.
தாமோதரன் செல்வகுமார் கூறியதாவது : படத்தில் பணியாற்றியுள்ள தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இளைஞர்கள். பலரும் குறும்படத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள். சினிமா மீது தீராத காதல் கொண்டவர்கள். இப்படத்தை ஒரு குடும்பம் போல் ஒருங்கிணைந்து உருவாக்கி உள்ளோம். பல பிரச்சினைகளில் பல்வேறு தடைகளுக்கிடையே படத்தை முடித்திருக்கிறோம். படப்பிடிப்பு வாகனங்கள் கூட செல்லாத பல இடங்களில் கொடைக்கானலில் படப்பிடிப்பு நடத்தினோம் என்றார்.