இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

சென்னையை சேர்ந்த மாடல் அழகி ஷர்னிதா ரவி. பிரபல நிறுவனங்களின் 50க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் சில்லுகருப்பட்டி புகழ் ஹலீதா ஷமீம் இயக்கும் வெப் தொடரில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த தொடர் விரைவில் ஓடிடியில் வெளிவர இருக்கிறது.
ஷர்னிதா ரவி கூறியதாவது: நான் பக்கா தமிழ் பொண்ணு, அதனால் நடிப்பில் என்னால் 100 சதவிகித திருப்தியுடன் நடிக்க முடிகிறது. ஏற்கெனவே ஆங்கில நாடகங்களில் நடித்திருப்பதால் கேமராவுக்கு முன்னால் நடிப்பது எளிதாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடிக்கும் ஆர்வம் இருக்கிறது. சினிமாவில் நடிப்பது குறித்து இப்போதுதான் முடிவு செய்துள்ளேன். நல்ல கதைகள் அமையும்போது பெரிய திரைக்கு வருவேன். என்கிறார் ஷர்னிதா ரவி.