'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சரத்குமார், மேக்னா நாயுடு நடித்த வைத்தீஸ்வரன் படத்தை இயக்கிய ஆர்.கே.வித்யாதரன் இயக்கி உள்ள படம் கடைசி காதல் கதை. இதில் வர்மா படத்தில் நடித்த ஆகாஷ் பிரேம்குமார், ஷாலு ஷம்மு, சாம்ஸ் உள்பட பலர் நடித்துள்ளர். படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
இதில் கலந்து கொண்டு இயக்குனர் கே.பாக்யராஜ் பேசியதாவது: தினமும் சாமி கும்பிடும்போது பொதுவான வேண்டுதல் எதையாவது சாமியிடம் கேட்பேன். கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற வேண்டினேன். தியேட்டர் திறந்த பிறகு மக்கள் தியேட்டருக்கு வரவேண்டும் என்று வேண்டினேன். இப்போது வரவேண்டாம் என்று வேண்டலாமா என்று யோசிக்கிறேன்.
காரணம் இப்போது சில படங்கள் பார்த்த பின்பு தியேட்டர் திறக்காமலே இருந்திருக்கலாமோ என்று எண்ண தோன்றுகிறது. நல்ல படங்களை வரவேற்கலாம். ஆனால் தவறான உதாரணங்கள் கொண்ட படங்களை வரவேற்கிறோம் என்பது கொஞ்சம் வருத்தம் அளிக்கிறது. அவர்களும் மக்கள் இதைத்தான் ரசிக்கிறார்கள் என்று மக்கள் மீது பழியை போட்டு தவறான படங்களை எடுக்கிறார்கள். பொது நல வழக்கு போடும் அளவிற்கு மன உளைச்சலாக இருக்கிறது. என்றார்.
ஆனால் அது என்ன படங்கள் என்றோ, எந்த மாதிரியான படங்கள் என்றோ அவர் குறிப்பிடவில்லை.