'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவகன், ஆலியா பட், ஒலிவியா மோரிஸ், ஸ்ரேயா மற்றும் பலர் நடிக்கும் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் டிரைலர் நேற்று காலை 5 மொழிகளில் யு டியூபில் வெளியிடப்பட்டது.
டிரைலர் எதிர்பார்த்தபடியே மிகவும் பிரம்மாண்டமாகவும், பரபரப்பாகவும் இருந்ததால் அந்தந்த மொழி ரசிகர்கள் உடனுக்குடன் பார்த்தார்கள். அதனால், அதிகப்படியான பார்வைகளைப் பெற்று டிரைலர் சாதனை படைத்துள்ளது. ஒரு மில்லியன் லைக்குகுளை 7 மணி நேரம் 43 நிமிடங்களில் பெற்று தெலுங்குப் பட டிரைலர்களில் புதிய சாதனையைப் படைத்துள்ளது.
24 மணி நேரத்தில் தெலுங்கில் 21 மில்லியன் பார்வைகளையும், ஹிந்தியில் 21 மில்லியன், கன்னடத்தில் 5.3மில்லியன், தமிழில் 3.3 மில்லியன், மலையாளத்தில் 2.45 மில்லியன் பார்வைகளையும் பெற்றுள்ளது.
ஜுனியர் என்டிஆர், ராம்சரண் இணைந்து நடிப்பதாலும், ராஜமவுலி படம் என்பதாலும் அனைத்தும் சேர்ந்து இந்த அளவிற்குப் பார்வைகளைப் பெறக் காரணமாக அமைந்துள்ளது. டிரைலருக்குக் கிடைத்துள்ள வரவேற்பால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியுள்ளது.