ஜுன் 2ல் இரண்டு படங்களுக்கே முக்கிய போட்டி | மாவீரன் படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது | யாஷிகா ஆனந்த் - அஜித் மைத்துனர் ரிச்சர்ட் ரிஷி காதலா...? | 37 ஆண்டுகளை நிறைவு செய்த 'விக்ரம்' | பாபா படத்தை தொடர்ந்து மற்றொரு ரஜினி படம் ரீ ரிலீஸ் | கதாநாயகன் ஆகும் பிக்பாஸ் பிரபலம் | மும்பையில் தனுஷ்... மீண்டும் ஒரு பாலிவுட் படம் | த்ரிஷா படத்தில் கெஸ்ட் ரோலில் மூன்று பிரபல ஹீரோக்கள் | நாயகன் படம் போன்று இருக்கும் : கமல் | 150 வயது வரை வாழும் வித்தை எனக்கு தெரியும் : சரத்குமார் |
கமலின் விஸ்வரூபம் படத்திற்கு எடிட்டராக பணியாற்றியவர் மகேஷ் நாராயணன். மலையாள சினிமாவில் இயக்குனராக மாறிய இவர் பஹத் பாசிலை வைத்து டேக் ஆப், சி யூ சூன், மாலிக் என தொடர்ச்சியாக படங்களை இயக்கினார். தற்போது பஹத் பாசில் நடிக்கும் படத்தையே இயக்குகிறார். படத்தின் பெயர் ஷெர்லக்
பிரபல மலையாள எழுத்தாளரும் இயக்குனருமான எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய பத்து சிறுகதைகளை மையப்படுத்தி பத்து படங்களின் தொகுப்பாக ஆந்தாலாஜி படம் ஒன்று உருவாகிறது. அந்தப்படத்தில் இந்த ஷெர்லக்கும் ஒரு படமாக உருவாகிறது. அவரது ஷெர்லக் என்கிற சிறுகதையை தழுவி இந்தப்படம் எடுக்கப்படுவதால் படத்திற்கும் அதே பெயரையே டைட்டிலாக வைத்துள்ளார்கள்.
இந்தப்படத்தில் பஹத் பாசிலின் அக்காவாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார் நதியா. 38 வருடங்களுக்கு முன் இயக்குனர் பாசிலின் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நதியா இப்போது அவரது மகன் படத்திலும் இணைந்து நடிக்கிறார் என்பது ஆச்சர்யமான ஒன்று. ஜனவரி மாதம் கனடாவில் இதன் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.