வந்தாச்சு ‛விஜய் 67' அப்டேட் : ரசிகர்கள் குஷி, இந்தவாரம் முழுக்க கொண்டாட்டம் தான் | அதிரடியில் மிரட்டும் நானியின் "தசரா" டீசர் | தாய் வீட்டிற்கு வந்த உணர்வு : சென்னையில் ஹன்சிகா பேட்டி | பழனியில் நடிகை அமலாபால் வழிபாடு | ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் |
அல்லு அர்ஜுன் தெலுங்கில் தற்போது சுகுமார் இயக்கத்தில் நடித்துள்ள படம் புஷ்பா. ஆந்திராவில் செம்மர கடத்தல்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகி வருகிறது. ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் சமந்தா ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதன் மூலம் மலையாள நடிகர் பஹத் பாசில் தெலுங்கில் அடி எடுத்து வைத்துள்ளார்.
பான் இந்திய படமாக இந்தி மற்றும் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் இந்தப் படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் கதையை ஒரு படத்திலேயே சொல்ல முடியாது என்பதால் பாகுபலி போல இரண்டு பாகங்களாக இந்தப்படம் வெளியாகிறது. முதல் பாகம் புஷ்பா ; தி ரைஸ் என்கிற பெயரில் வரும் டிச-17ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தநிலையில் இந்தப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது, 2 மணி நேரம் 59 நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில் இந்த முதல் பாகம் வெளியாக இருக்கிறது.