விஜய்யுடன் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள்! | 'அடடே சுந்தரா' டிரைலர் மே 30ல் வெளியீடு | ஆக் ஷனில் அசத்தும் அக்னிச் சிறகுககள் டீசர் | வீர சாவர்க்கரை அப்படியே பிரதிபலிக்கும் ரன்தீப் | குறும்படத்தில் நடித்த எஸ்.ஏ.சந்திரசேகர் | பாடி பில்டரை மணந்தார் ஸ்ருதி | வருமானவரி வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய எஸ்.ஜே.சூர்யாவின் மனு தள்ளுபடி | என்டிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது: ஜூனியர் என்டிஆர் அஞ்சலி | 2021 கேரள அரசு விருதுகள் அறிவிப்பு : சிறந்த நடிகர் பிஜூமேனன், சிறந்த நடிகை ரேவதி | புதுச்சேரியில் சிவகார்த்திகேயன் பட பாடல் படப்பிடிப்பு |
நடிகர் கமல்ஹாசன் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், தனது திறமையால் படிபடியாக முன்னேறி முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். தமிழின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித் உள்ளிட்டவர்களோடும் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் பிசியான நடிகையாக மாறியுள்ள ஸ்ருதிஹாசன், 'சலார்' படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக நடித்து முடித்துள்ளார். நடிப்பு, நடனம், பாடகி என பன்முக திறமைக்கொண்டு சினிமாவில் பணியாற்றி வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் ஸ்ருதிஹாசன். அவ்வப்போது ஸ்ருதி ஹாசன் வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தற்போது ஸ்ருதி ஹாசன் நகைக்கடை விளம்பரத்திற்காக நடத்தியுள்ள போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பார்ப்பதற்கு மகாராணி போல காட்சியளிக்கிறார்.