உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் | பிளாஷ்பேக் : அந்த காலத்திலேயே கலக்கிய 'டவுன் பஸ்' | தினமும் எம்ஜிஆரை வேண்டிக் கொண்டு நடித்தேன் : கார்த்தி | ரஜினி மாமனாராக நடிக்க வேண்டியது : திண்டுக்கல் லியோனி சொன்ன புது தகவல் | 25 வருடங்களுக்கு முன்பே ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய பார்த்திபன் |

நயன்தாராவை வைத்து மாயா படத்தை இயக்கியவர் அஸ்வின் சரவணன். 6 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நயன்தாராவை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு கனெக்ட் என பெயரிட்டு இரு போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். ஹிந்தி நடிகர் அனுபம் கெர், நடிகர் சத்யராஜ் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். பிரித்வி சந்திரசேகர் இசையமைக்கிறார். நயன்தாராவின் காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் இந்த படத்தை தனது ரவுடி பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கிறார். நயன்தாராவின் பிறந்தநாளான இன்று(நவ., 18) இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாயா படம் போன்று இந்த படமும் சஸ்பென்ஸ் திரில்லர் கலந்த படமாக நயன்தாராவை முதன்மை நாயகியாக கொண்டு தயாராகிறது.