திவ்யா கிருஷ்ணனுக்கு சல்யூட் அடிக்கும் ரசிகர்கள் | டுவிட்டரில் நுழைந்த விக்ரம் | விஜய் ஆண்டனியின் ஒரு படத்தைக் கூடப் பார்க்காத மிஷ்கின் | சமந்தாவின் ‛யசோதா' ரிலீஸ் எப்போது | லட்சுமி ராமகிருஷ்ணன் படத்திற்கு இளையராஜா இசை | அடுத்த ஹனிமூன் டிரிப்பா ; ரசிகர்கள் கேள்வி | தமிழ், தெலுங்கில் ரீமேக்காகும் ஆலியா பட்டின் டார்லிங்ஸ் | வெந்து தணிந்தது காடு 2வது பாடல் ஆக.,14ல் வெளியாகிறது | அஜித்தின் 61வது படம் வல்லமை : நாளை போஸ்டர் வெளியாகிறது? | விஜய் 67 : 6 வில்லன்களின் அர்ஜுனும் ஒருவர் |
மலையாள சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நடிகர் ஷேன் நிகம். தான் நடித்து வந்த வெயில் படத்தில் சம்பளம் அதிகமாக கேட்டு தயாரிப்பாளருடன் பிரச்சனை செய்து ரெட்கார்டு போடப்படும் நிலைக்கு ஆளானார். அதன்பின் தவறுக்கு மன்னிப்பு கேட்டு தற்போது சில படங்களில் நடித்து வருகிறார் ஷேன் நிகம். அப்படி அவர் நடிக்கும் ஒரு படம் தான் பெர்முடா.
இந்தப்படத்தை பிரபல மலையாள இயக்குனர் டி.கே.ராஜீவ் குமார் இயகியுள்ளார். பல வருடங்களுக்கு முன் மலையாளத்தில் கமல் நடித்த சாணக்யன் படத்தை இயக்கியவரும், சில வருடங்களுக்கு முன் கமல் நடிப்பில் துவங்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்ட சபாஷ் நாயுடு படத்தை இயக்கியவரும் இவர் தான்.
இந்தப்படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றை மோகன்லால் பாடியுள்ளார். டி.கே.ராஜீவ் குமாரின் டைரக்சனில் சில படங்களில் நடித்துள்ளார் மோகன்லால். அந்த நட்பின் அடிப்படையில் தான் இந்த பாடலை பாடியுள்ளார். மேலும் இளைய தலைமுறைக்கான கொண்டாட்டமான பாடலாக இது இருக்கும் என்பதால் இந்த பாடலை பாடவேண்டும் என்கிற உத்வேகம் எனக்கு ஏற்பட்டது என்றும் கூறியுள்ளார் மோகன்லால்.