ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் | எனக்கு என்ன ஆச்சு ? நஸ்ரியா தன்னிலை விளக்கம் | பிரபாஸ் படப்பிடிப்பில் மிதுன் சக்கரவர்த்திக்கு ஏற்பட்ட கைமுறிவு | கொச்சியில் புது வீடு கட்டினார் நிமிஷா சஜயன் | 'கூலி, 45' ; ஒரேநாளில் வெளியாகும் உபேந்திராவின் 2 படங்கள் | நடிகை ஜனனி திருமண நிச்சயதார்த்தம் ; விமான பைலட்டை மணக்கிறார் | விஜய் டிவி பிரியங்கா 2வது திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா...! | பாலோயர்ஸ்: உண்மையைப் பேசியுள்ள பூஜா ஹெக்டே | ரீ-ரிலீஸில் வரவேற்பைப் பெறுமா 'சச்சின்' |
இந்த வருடம் தீபாவளி பண்டிகைக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குரிய அண்ணாத்த, ஜெய்பீம், எனிமி மற்றும் சாம்ஸின் ஆபரேஷன் ஜுஜுபி என நான்கு படங்கள் வெளியாகியுள்ளன. இதில் ஜெய் பீம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பே ஒடிடியில் வெளியாகி விட்டது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்த நான்கு படங்களில் ஆபரேஷன் ஜுஜுபி தவிர்த்து மற்ற மூன்று படங்களில் நடிகர் பிரகாஷ்ராஜ் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்.
குறிப்பாக கடந்த வருடத்தில் அவர் நடித்த பாவ கதைகள் என்கிற ஒரே ஒரு படம் மட்டுமே வெளியானது. அதுவும் ஆந்தாலாஜி படம் தான்.. ஆனால் இப்படி ஒரு பண்டிகை ரிலீஸில் ஒரேசமயத்தில் அவர் நடித்த மூன்று படங்கள் வெளியாவது அவரது திரையுலக பயணத்தில் இதுதான் முதன்முறை.
அதுமட்டுமல்ல, தமிழில் பல முன்னணி நடிகர்களுக்கு மெயின் வில்லனாக பல படங்களில் நடித்திருந்த பிரகாஷ்ராஜ், இத்தனை வருடங்களில் ரஜினிகாந்தின் படையப்பா படத்தில் ரெண்டு நிமிடம் மட்டுமே வந்துபோகும் சாதாரண கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தார். கிட்டத்தட்ட 22 வருடங்கள் கழித்து தற்போது அவருக்கு வில்லனாக நடித்து அந்த குறையையும் தீர்த்து விட்டார்.
அதேபோல சூர்யாவுடன் சிங்கம் படத்திலும் விஷாலுடன் தீராத விளையாட்டு பிள்ளை படத்திலும் இதற்குமுன் பிரகாஷ்ராஜ் நடித்திருந்தாலும் கூட 11 வருடங்களுக்கு பிறகு அவர்கள் இருவருடனும் மீண்டும் இணைந்து நடித்துள்ளார்.
பிரகாஷ்ராஜின் நடிப்பை ரசிப்பதற்கென்றே உள்ள ஒரு ரசிகர் கூட்டம் “இந்த தீபாவளி முத்துப்பாண்டி கோட்டை டா” என சோஷியல் மீடியாவில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.