என்மகள் மீரா மிகவும் அன்பானவள் தைரியமானவள்: விஜய் ஆண்டனி | அர்ஜுன் தாஸிற்கு பதிலாக ஆரவ் | உலகின் மிக அழகான பெண்ணுடன் நான் - அசோக் செல்வன் வெளியிட்ட பதிவு! | ராதே ஷ்யாம் இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | திடீரென்று ஹேர் ஸ்டைல் மாற்றிய எமி ஜாக்சன்! | திருமணம் பற்றிய செய்தி - வதந்தி என ‛லியோ' ஸ்டைலில் த்ரிஷா பதில் | 'விக்ரம், பிஎஸ் 2, ஜெயிலர்,' படங்கள் ஹிந்தியில் வரவேற்பு பெறாதது ஏன் ? | பாலிவுட்டில் தாக்கு பிடிப்பாரா ராஷ்மிகா? | பிரம்மானந்தம் கதை நாயகனாக நடிக்கும் 'கீடா கோலா' | கடற்கரை மணலால் கஷ்டப்பட்டேன்: பிரியதர்ஷினி அருணாசலம் |
மலையாளத்தில் குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜோஜூ ஜார்ஜ். கடந்த 2018ல் வெளியான ஜோசப் என்கிற படத்தில் கதையின் நாயகனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்ற இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜகமே தந்திரம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தநிலையில் கேரளாவில் கொச்சியில் உள்ள முக்கியமான சாலை ஒன்றில் மறியல் செய்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிகழ்வு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கேரளாவில் கொச்சியில் உள்ள முக்கியமான சாலை ஒன்றில் பிரபல அரசியல் கட்சியினர் நேற்று காலை மறியல் செய்தனர். இதனால் அங்கே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த வழியாக வந்த நடிகர் ஜோஜு ஜார்ஜும் அந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கினார்.
நேரம் ஆக ஆக பொறுமை இழந்த ஜோஜு ஜார்ஜ், மறியலில் ஈடுபட்டவர்களிடம் சென்று போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக கூறினார். இதனால் கோபமான போராட்டக்காரர்கள் அவரது கார் கண்ணாடியை உடைத்தனர். இதை தொடர்ந்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் ஜோஜு ஜார்ஜ்.
இந்த பரபரப்பான நிகழ்வு குறித்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியானது. இதை தொடர்ந்து மறியல்காரர்கள் ஜோஜு ஜார்ஜ் குடித்துவிட்டு வந்து போராட்டக்காரர்களிடம் தெருவில் சண்டை போடும் குண்டர் போல நடந்து கொண்டதாகவும், பெண் ஒருவரிடம் அநாகரிகமாக பேசியதாகவும் புகார் அளித்தனர்.. ஆனால் போலீஸார் விசாரணையிலும் சோதனையிலும் ஜோஜு ஜார்ஜ் மது அருந்தவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
இதுபற்றி ஜோஜு ஜார்ஜ் கூறும்போது, “அவர்கள் சொன்னதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை என்பது அங்கிருந்த பொதுமக்களுக்கு நன்றாகவே தெரியும்.. நான் போராட்டத்திற்கு எதிரானவன் அல்ல. அதேசமயம் பொதுமக்களுக்கு எந்த இடைஞ்சலும் ஏற்பட கூடாது இல்லையா?. அதைத்தான் அவர்களிடம் கூறினேன்.. மேலும் நான் மது அருந்துவதை நிறுத்தி ஐந்து வருடங்கள் ஆகின்றன” என கூறியுள்ளார்.