'கல்கி 2898 ஏடி' படப்பிடிப்பில் கமல்ஹாசன் | சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் | அஜித் எடுத்த அதிரடி முடிவு | மீண்டும் போலீஸாக மிரட்ட வரும் விஜய் ஆண்டனி | ஓடிடி ரிலீஸ் : ஹிந்தி சினிமாவை பின்பற்றுமா தமிழ் சினிமா ? | மோகன்லால் - ஜீத்து ஜோசப்பின் நேரு ரிலீஸ் தேதி அறிவிப்பு | அதிக உணவுகளை சூர்யா ஆர்டர் பண்ணுவது ஏன்? ஜோதிகா வெளியிட்ட சுவாரசிய தகவல் | ஜெயம் ரவியின் ‛காதலிக்க நேரமில்லை' | 'பருத்தி வீரன்' பஞ்சாயத்து : 'கமா' போட்ட சசிகுமார் | ரஜினி 171வது படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் - ஜீவன்? |
தெலுங்கு திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களின் படங்களில் தொடர்ந்து அவர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நடிகை பூஜா ஹெக்டே. அந்தவகையில் தற்போது பிராபாஸ் ஜோடியாக ராதே ஷ்யாம் என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் வரும் ஜனவரி மாதம் சங்கராந்தி பண்டிகையன்று வெளியாகிறது. அதேபோல சிரஞ்சீவி நடித்துள்ள ஆச்சார்யா படத்தில் சற்றே நீட்டிக்கப்பட்ட கெஸ்ட் ரோலில் நடித்துள்ள நடிகர் ராம்சரணுக்கு ஜோடியாகவும் பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
இந்தப்படத்தில் இவர்கள் இருவருக்குமான நீலாம்பரி என்கிற இரண்டாவது பாடலை வரும் நவ- 5 ஆம் தேதி வெளியிட இருக்கின்றனர். அதற்காக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு போஸ்டரில் ராம்சரணுடன் புல்லாங்குழல் ஊதும் ராதை போன்ற கெட்டப்பில் பூஜா ஹெக்டே இருப்பதை பார்க்கும்போது பிரபாஸுக்கு மட்டுமல்ல, ராம்சரணுக்கும் இவர் தான் ராதையோ என்றே சொல்ல தோன்றுகிறது.