நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழில் அஜித் நடித்த ஆசை படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து அறிமுகமானவர் பாலிவுட் நடிகை பூஜா பத்ரா. அதைத்தொடர்ந்து மீண்டும் அஜித்துடன் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் அவரது உதவியாளராக இணைந்து நடித்தார். மலையாளத்தில் 1999ல் மம்முட்டியுடன் இணைந்து மேகம் என்கிற படத்தில் ஜோடியாக நடித்துள்ளார். இந்தநிலையில் இருபது வருடங்களுக்கு பிறகு மீண்டும் மம்முட்டியை சந்தித்துள்ளார்.
சமீப நாட்களாக ஹங்கேரியில் உள்ள புடாபேஸ்ட் நகரத்தில் தங்கியுள்ள பூஜா பத்ரா, தெலுங்கில் உருவாகும் ஏஜென்ட் படப்பிடிப்பிற்காக அங்கே மம்முட்டி வந்திருப்பதை அறிந்து அவரை நேரில் சென்று சந்தித்துள்ளார். அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துகொண்டுள்ள பூஜா பத்ரா, “நீண்ட நாட்கள் கழித்து மம்முட்டி சாரை சந்திக்கிறேன்.. இத்தனை வருடங்களில் அவர் கொஞ்சம் கூட மாறவே இல்லை” என ஆச்சர்யத்துடன் கூறியுள்ளார்.