நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி : போட்டோ வைரல் | ‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் |
சிவா இயக்கத்தில், இமான் இசையமைப்பில், ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி மற்றும் பலர் நடிக்கும் படம் 'அண்ணாத்த'. தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் தமிழ்ப் படங்களுக்கான வியாபாரம் பெரிய அளவில் வர ரஜினிகாந்த் தான் காரணம். அவரது 'சிவாஜி' படம் முதல் இது வளர்ந்து நிற்கிறது.
கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் 'நார்மல்' நிலைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் 'அண்ணாத்த' படம் மக்களை இன்னும் அதிக அளவில் தியேட்டர்கள் பக்கம் வரவழைக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அமெரிக்காவில் 'அண்ணாத்த' தமிழ்ப் படம் 416 தியேட்டர்களில் திரையிட உள்ளார்கள். இதன் தெலுங்கு டப்பிங்கான 'பெத்தன்னா' 261 தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளது. சிங்கப்பூரில் 23 தியேட்டர்களில் திரையிடப்ட உள்ளது. இது இன்றைய நிலவரம். அடுத்த சில நாட்களில் இன்னும் கூடலாம்.
வெளிநாட்டு உரிமையை கியூப் சினிமா நிறுவனம் பெற்றுள்ளது.