கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
அமலாபால் தயாரித்து, நடிக்கும், ‛கடாவர்' படத்தை அனுாப் எஸ்.பணிக்கர் இயக்கியுள்ளார். இதன் முதல் போஸ்டர் இன்று அமலாபாலின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. மொத்த படத்தையுமே முதல் போஸ்டரில் சொல்லியுள்ளனர். தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணராக நடிக்கும் அமலாபால், ஒரு வாரம் மருத்துவமனைக்கு சென்று துறை சார்ந்த மருத்துவர்களிடமும் பயிற்சி பெற்றார். அதுல்யாரவி, ஹரிஷ் உத்தமன், ரித்விகா, முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‛அசல் தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணராகவே அமலாபால் மாறிவிட்டார்' என இயக்குனர் கூறியுள்ளார்.
12 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கும் நடிகை அமலாபால் முதன்முறையாக தனது பெயரிலேயே தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, முதல் படமாக இந்த படத்தை தயாரித்து நடிக்கிறார்.