அமெரிக்க ஸ்டுடியோவுக்குச் செல்லும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் | அகண்டா 2: தெலுங்கானா முன்பதிவு தாமதம் | 'பிளாக் பஸ்டர்' வெற்றி இல்லாத 2025? | பணிவு, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவம் ‛ஏவிஎம்' சரவணன் : திரையுலகினர் புகழஞ்சலி | ஹீரோயின் ஆன காயத்ரி ரேமா | 8 மணி நேர வேலை சினிமாவில் சாத்தியமில்லை: துல்கர் சல்மான் | கார்த்தி படத்தில் எம்ஜிஆர் பாடல் | இளையராஜாவுடன் சமரசம்: 'டியூட்' வழக்கு முடித்து வைப்பு | பிளாஷ்பேக்: ஆங்கில படத்தை தழுவிய பாலுமகேந்திரா | ஏவிஎம் சரவணன் மறைவு என் மனதை பாதிக்கிறது : ரஜினி |

2019ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்வு நேற்று டில்லியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறந்த நடிகருக்கான விருதை தனுஷ், சிறந்த துணை நடிகருக்கான விருதை விஜய் சேதுபதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
ஒரே நாளில் ஒரே மேடையில் தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோர் அடுத்தடுத்து விருது பெற்றுக் கொண்டது குறித்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் விஜய் சேதுபதியை பாராட்டி மீம்ஸ்களை வெளியிட்டு வருகிறார்கள்.
2006ம் ஆண்டு தனுஷ் கதாநாயகனாக நடித்து வெளிவந்த 'புதுப்பேட்டை' படத்தில் கூட்டத்தில் ஒருவராக அடியாள் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருப்பார். அதன்பின் படிப்படியாக வளர்ந்து கதாநாயகனாகி இன்று தேசிய விருது பெறும் அளவிற்கு விஜய் சேதுபதி வளர்ந்துள்ளார்.
'புதுப்பேட்டை' படத்தில் தனுஷின் பின்னாடி விஜய் சேதுபதி நிற்கும் புகைப்படத்தையும், நேற்று இருவரும் விருது பெற்ற புகைப்படத்தையும் ஒன்றாகப் பகிர்ந்து ரசிகர்கள் சில பல மீம்ஸ்களை வெளியிட்டுள்ளனர்.
முயற்சி என்ற ஒன்று இருந்தால் கூட்டத்தில் ஒருவராக இருப்பவர் விருத பெறும் ஒருவராக இருக்கும் அளவிற்கு உயர முடியும் என்பதற்கு விஜய் சேதுபதி ஒரு சாட்சி.