''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு மூடப்பட்ட தியேட்டர்கள் ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி திறக்கப்பட்டது. இன்றுடன் இரண்டு மாத காலமாகிவிட்டது. கடந்த இரண்டு மாத காலமாக 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி கொடுத்துள்ளது தமிழக அரசு. நவம்பர் மாதம் முதல் வாரத்திலேயே தீபாவளி வருவதால் நவம்பர் 1 முதல் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கொடுக்கப்படலாம் எனத் தகவல் வெளியானது.
இதுவரையில் 50 சதவீத இருக்கை அனுமதியிலேயே 'கோடியில் ஒருவன், டாக்டர், அரண்மனை 3' ஆகிய படங்கள் லாபகரமாக இருந்ததாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மேலும் பல படங்களை வெளியிட உள்ளார்கள். வாரத்திற்கு நான்கைந்து படங்களாவது வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி என்றால் அடுத்த இரண்டு மாதங்களில் 50க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகவும் வாய்ப்புள்ளது.