இந்த வாரமும் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் | காந்தாரா பாணியில் உருவாகும் 'கரிகாடன்' | அனுமனை இழிவுபடுத்தி விட்டார் : ராஜமவுலி மீது போலீசில் புகார் | என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் |

சென்னை: ஆஸ்கர் 2022 போட்டிக்கு இந்தியா சார்பில் கூழாங்கல் படம் போட்டியிட உள்ளது.
ஆஸ்கர் எனப்படும், 94வது அகாடமி விருதுகள் அடுத்த ஆண்டு மார்ச் 27ம் தேதி நடக்கிறது. இதில், சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவில் இந்திய படம் ஒன்றை தேர்வு செய்யும் பணி கொல்கத்தாவில் நடந்தது. இதில் , ஹிந்தி மற்றும் மலையாளத்தில் சர்தார் உத்தாம், ஷேர்னி, செல்லோ ஷோ, நாயாட்டு படங்களும், தமிழில், கூழாங்கல், மண்டேலா உள்பட 14 படங்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தன.
![]() |
இந்திய திரைப்பட கூட்டமைப்பில் இருந்து மொத்தம், 15 நடுவர்கள், மலையாள படத் தயாரிப்பாளர் சாஜி என்.கருண் தலைமையில், 14 படங்களையும் பார்வையிட்டனர் இதில், விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் சார்பில் உருவான, கூழாங்கல் படம் தேர்வாகியுள்ளது. 2022ம் ஆண்டின் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில், இந்தியாவின் அதிகாரப்பூர்வமாக கூழாங்கல் தேர்வாகியுள்ளது. இப்படத்தை பிஎஸ் வினோத்ராஜ் இயக்கியுள்ளார்.
சமீபத்தில், ரோட்டர்டாமில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில், கூழாங்கல் படத்துக்கு டைகர் விருது கிடைத்தது. இந்த வகையில் டைகர் விருதை பெற்ற முதல் படமாக இப்படம் உள்ளது. யதார்த்தமான கதையம்சம் கொண்ட இந்த படத்தில் செல்லப்பாண்டி மற்றும் கருத்தடையான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் தியேட்டரில் வெளியாகிறது.