லியோ அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும்? | போனில் மட்டும் பேசு : பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு டார்ச்சர் கொடுத்த இயக்குநர் | எதிர்நீச்சல் தொடரில் 10 ஆண்டுகள் கூட நடிப்பேன் : மதுமிதா மகிழ்ச்சி | தீபிகா படுகோனின் ஜிம் மேட்டாக மாறிய ஐஸ்வர்யா மேனன் | 17 வருடங்களுக்கு பிறகு 2ம் பாகத்திற்காக இணைந்த சுரேஷ் கோபி - ஜெயராஜ் | மறுபிறவி ரகசியம் உடைக்கும் 'ஆன்மீக அழைப்பு' | தமிழில் வெளியாகும் ஹாலிவுட் பேய் படம் | மைதான் : அறியப்படாத இந்திய கால்பந்து அணியின் கதை | பிரியங்கா சோப்ராவை துரத்தியது கரண் ஜோஹர்தான்: கங்கனா குற்றச்சாட்டு | வெப் தொடரில் நடிக்கும் பிக்பாஸ் மணிகண்ட ராஜேஷ் |
புதுச்சேரி அரசு ஆண்டுதோறும் சிறந்த தமிழ் படம் ஒன்றை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. அந்த வரிசையில் கடந்த ஆண்டு வெளியான படங்களில் கூழாங்கல் சிறந்த படமாக விருதுக்கு தேர்வு செய்துள்ளது. வருகிற 9ம் தேதி நடக்கும் விழாவில் படத்தின் இயக்குனர் வினோத்ராஜுக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கப்பட இருக்கிறது.
நயன்தாரா, விக்னேஷ் சிவன் தங்கள் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்திருந்த இந்த படத்தை பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கி இருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இப்படம், ராட்டர்டாம் திரைப்பட விழாவில் விருதை வென்றது.
ஆஸ்கர் விருதுக்காக இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட படங்களின் பட்டியலிலும் இடம்பெற்றது. தந்தை மகனுக்கு இடையிலான ஒரு நாள் பயணத்தை சொல்லும் இந்த படத்தில் தந்தையாக செல்ல பாண்டியும், மகனாக கருத்திடையானும் நடித்திருக்கிறார்கள். இந்த படம் இன்னும் தியேட்டர்களில் வெளியாகவில்லை.