ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
பாடகி சின்மயி பாடலை தாண்டி அறியப்பட்டவர். துணிச்சலான கருத்துக்களை கூறக்கூடியவர். எவருக்கும் அஞ்சாமல் நியாயத்தை பேசுகிறவர் என்கிற இமேஜ் அவருக்கு உண்டு. அவர் அடிப்படையில் ஒரு டப்பிங் கலைஞரும்கூட. டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து அவரை நீக்க பெரிய பெரிய ஆட்கள் முயற்சித்தபோதும் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி அதில் நீடித்து வருகிறார்.
சின்மயி முன்னணி நடிகைகள் பலருக்கு டப்பிங் பேசி வருகிறார். அவற்றில் முக்கியமானவர் சமந்தா. தற்போது நன்றாக தெலுங்கு பேச கற்றுக் கொண்ட சமந்த தனது தெலுங்கு படங்களுக்கு தானே பேசி வருகிறார். இதனால் சமந்தாவுடன் ஆன டப்பிங் பயணம் முடிவுக்கு வருவதாக சின்மயி கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியிருப்பதாவது: தெலுங்கு சினிமாவில் டப்பிங் கலைஞராக என் பயணம் முடிவடையும் என்று நினைக்கிறேன். என் சிறந்த தோழி சமந்தா தனது கேரக்டர்களுக்கு அவரே பேசி வருகிறார். அதனால், அவருக்குப் பின்னணி பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காது. அவருடனான எனது டப்பிங் பயணம் முடிந்துவிட்டது. என்று தெரிவித்துள்ளார்.