கோவா திரைப்பட விழாவில் தமிழ் குறும்படம் | 110 நிமிடம் பிணமாக நடித்து பிரபுதேவா சாதனை | முதல்வர் குடும்ப திருமணத்தில் தனுஷ், நயன்தாரா : முகத்தை திருப்பிக் கொண்டு வெறுப்பை காட்டினர் | இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் |
வினோத்ராஜ் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், செல்லபாண்டி, கருத்தடையான் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'கூழாங்கல்'. இப்படம் ஆஸ்கர் விருது போட்டிகளில் கலந்து கொள்ள இந்தியாவின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே படமாக அமைந்தது. ஆஸ்கர் போட்டியில் சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான போட்டியில் இந்தியாவின் சார்பில் இப்படம் கலந்து கொள்ள அனுப்பி வைக்கப்பட்டது.
'கூழாங்கல்' படத்துடன் உலக அளவில் 93 நாடுகளிலிருந்து படங்கள் கலந்து கொண்டன. அவற்றிலிருந்து இறுதிப் போட்டிக்கு 15 படங்கள் மட்டுமே நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படும். அந்த 15 படங்களின் பட்டியலில் 'கூழாங்கல்' படம் தேர்வாகாமல் போய்விட்டது.
கடைசியாக அந்த போட்டியில் தேர்வான 15 படங்களின் பட்டியலை ஆஸ்கர் குழு வெளியிட்டது. அந்தப் பட்டியலைப் பகிர்ந்து 'கூழாங்கல்' படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.
“இந்தப் பட்டியலில் இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஒரு சுத்தமான சினிமாவைத் தந்ததற்காக இயக்குனர் வினோத்ராஜைப் பாராட்ட வேண்டும். ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் எங்களது படத்தை தேர்வு செய்த இந்திய நடுவர் குழுவுக்கு எனது நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.