தமிழ் ரசிகர்களைக் கவராத 'புஷ்பா… புஷ்பா…' | 'சலார்' டிவி ஒளிபரப்பு : அதிர்ச்சி தந்த டிஆர்பி ரேட்டிங் | யஷ் படத்திலிருந்து கரீனா கபூர் விலகல்? | அண்ணாமலை பயோபிக் : தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆர்வம் | ப்ளடி பெக்கராக மாறிய கவின் | மகள் திருமணம் : ஆனந்த கண்ணீரில் ஜெயராம் | இது தந்தை பாசம் : யுவனுக்கு ஊட்டிவிடும் இளையராஜா | தேர்தலில் ஓட்டுபோடாதது ஏன்...? - ஜோதிகா விளக்கம் | அம்மாவுக்காக தான் சொன்னேன் - அதிதி | அமிதாப் உடன் ரஜினி : வேட்டையன் போட்டோஸ் வைரல் |
ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண் மற்றும் பலர் நடிக்கும் 'ஆர்ஆர்ஆர்' படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் அடுத்த ஆண்டு ஜனவரி 7ம் தேதி வெளியாக உள்ளது. அப்படத்துடனேயே மேலும் சில தெலுங்குப் படங்கள் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. 'பீம்லா நாயக், சர்க்காரு வாரி பாட்டா, எப் 3' ஆகிய படங்களை வெளியிடலாம் என தேதிகளை பிளாக் செய்து வைத்திருந்தார்கள்.
இந்நிலையில் 'ஆர்ஆர்ஆர்' படம் ஒரு தெலுங்குப் படம் என்பதாலும் அப்படத்தை உலக அளவில் வெளியிடுவதால் தெலுங்குத் திரையுலகத்திற்குத்தான் பெருமை என்பதாலும் மற்ற படங்களை வெளியிடுவதை தள்ளி வைத்துள்ளனர். அதனால், அப்படக் குழுவினருக்கு மனப்பூர்வமாக நன்றியைத் தெரிவித்துள்ளார் ராஜமவுலி.
அதே சமயம் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த 'பாகுபலி' படம் மூலம் பான்-இந்தியா நடிகரான பிரபாஸ் நடித்துள்ள 'ராதே ஷ்யாம்' படத்தைத் தள்ளி வைக்கவில்லை. ஜனவரி 14ம் தேதி படத்தை வெளியிடும் முடிவில் இருந்து அவர்கள் மாறவில்லை.