எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
சமூக வலைத்தளங்களில் ஒரு அடிப்படை மரியாதை கூட இல்லாமல் பலர் செயல்பட்டு வருகிறார்கள். சினிமா பிரபலங்கள், குறிப்பாக நடிகைகளை 'டிரோல்' செய்பவர்களின் எண்ணிக்கை சமூக வலைத்தளங்களில் அதிகம்.
அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியெல்லாம் தரக்குறைவான விமர்சனங்களையும் பலர் முன்வைப்பதுண்டு. அப்படி ஒரு ரசிகர் சமந்தாவை 'டேக்' செய்து, “விவகாரத்து பெற்ற, இரண்டாம் தரமானவர், ஒரு ஜென்டில்மேனிடமிருந்து 50 கோடி ரூபாயை வரியில்லாமல் பெற்றவர்” என 'டிரோல்' செய்திருந்தார்.
அந்த ரசிகரின் டுவீட்டை ரிடுவீட் செய்த சமந்தா, “உங்கள் ஆன்மாவை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்,” என்று பதிலடி கொடுத்திருந்தார். சமந்தா ரிடுவீட் செய்ததைத் தொடர்ந்து அந்த கணக்கு வைத்திருந்த நபர் உடனடியாக தன்னுடைய கணக்கை டெலிட் செய்துவிட்டார். டுவிட்டர் தளங்களில் இப்படித்தான் போலியான கணக்குகளை ஆரம்பித்து தரமற்ற முறையில் பலர் செயல்பட்டு வருகின்றனர்.