''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
சமுத்திரகனி, இனியா, சந்தோஷி நடித்த படம் ரைட்டர். இதனை பா.ரஞ்சித்துடன் இணைந்து அபயானந்த் சிங், பியூஷ் சிங் மற்றும் அதிதி ஆனந்த் ஆகியோர் தயாரித்துள்ளார். பா.ரஞ்சித்தின் உதவியாளர் பிராங்களின் ஜேக்கப் இயக்கி உள்ளார்.
காவல் நிலையத்தில் பணியாற்றும் ஒரு ரைட்டரின் வாழ்க்கையை மையமாக கொண்ட படம். இந்த படத்தில் இனியா குதிரைப்படை கான்ஸ்டபிளாக நடித்துள்ளார். இதற்கு முன் பல நடிகைகள் லேடி கான்ஸ்டபிளாக நடித்திருந்தாலும் குதிரைப்படை கான்ஸ்டபிளாக யாரும் நடித்தில்லை. இதற்காக இனியா குதிரையேற்ற பயிற்சி பெற்று நடித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்த படத்தில் நான் ஏற்று நடித்திருக்கும் கேரக்டர் இதுவரை யாரும் செய்யாதது என்று சொன்னார்கள். குதிரை சவாரி பயிற்சி பெற்று நடித்துள்ளேன். எனக்கு குதிரையேற்றம் தெரியும். நான் அதை துபாய் பயிற்சி மையத்தில் கற்றுக்கொண்டேன், நான் கற்றுக்கொண்டதை நன்றாகப் பயன்படுத்த முடிந்தது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். டூப் போடாமல் சண்டை காட்சிகளில் நடித்துள்ளேன். இதனால் காயமும் அடைந்தேன். இந்த படத்தில் நாங்கள் நிறைய முயற்சிகள் மற்றும் கடின உழைப்பை கொடுத்துள்ளோம். என்றார்.