டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி |
கோடியில் ஒருவன் படத்திற்கு பிறகு வெளிவர இருக்கும் விஜய் ஆண்டனியின் படம் தமிழரசன். தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்த படத்திற்கு தெலுங்கில் விக்ரம் ரத்தோட் என்று தலைப்பு வைத்துள்ளனர். எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கவுசல்யா ராணி தயாரித்துள்ளார்.
ரம்யா நம்பீசன் மற்றும் சுரேஷ்கோபி, ராதாரவி, சோனு சூட்,யோகிபாபு, ரோபோ சங்கர், கஸ்தூரி, சங்கீதா, சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர் ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ், சென்ட்ராயன், கும்கி அஸ்வின்,மேஜ,ர் கவுதம், சுவாமி நாதன், முனீஸ்காந்த், உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார், இளையராஜா இசை அமைக்கிறார். பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார்.
படத்தின் தெலுங்கு வெர்சன் பாடல் வெளியீட்டு விழா திருப்பதியில் நடந்தது. அப்பல்லோ புரொடக்ஷன் சார்பில் ரவுரி வெங்கட சாமி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியிடுகிறார்.