‛அலைபாயுதே' படத்தின் ரகசியத்தை முதல்முறையாக பகிர்ந்த மணிரத்னம்! | பள்ளி பருவத்தை நினைவுகூர்ந்த சாய் பல்லவி! | இயக்குனர் அவதாரம் எடுக்கும் லப்பர் பந்து நாயகி! | சாதி தொடர்பான படங்களை எடுப்பதில் உடன்பாடில்லை: கவுதம் மேனன் கருத்து | சிம்பு பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்! | ராம் கோபால் வர்மா கம்பேக் தருவாரா? | ‛ஜனநாயகன்' படத்தின் செகண்ட்லுக் போஸ்டர்: குஷியான ரசிகர்கள் | சவால் விடும் தாரா நடிகை | பத்மபூஷன் - சீனியர் நடிகர்களுடன் இணைந்த அஜித் | சர்ச்சை பேச்சு: பகிரங்க மன்னிப்பு கேட்ட மிஷ்கின் |
இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் தமிழரசன். இந்த படத்தை இயக்குனர் பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார். ரம்யா நம்பீசன், சோனு சூட், சுரேஷ்கோபி, ராதாரவி, யோகி பாபு, சங்கீதா, கஸ்தூரி, ரோபோ சங்கர், சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இளையராஜா இசை அமைத்துள்ளார் .இந்த படத்தை எஸ்.என்.எஸ். மூவீஸ் தயாரித்துள்ளது.
கடந்தாண்டே ரிலீசுக்கு தயாரான இப்படம் பல ரிலீஸ் தேதிகள் அறிவித்தும் வெளியாகமல் இருந்தது. சமீபத்தில் ஏப்ரல் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்தும் தள்ளிபோனது. இதை தொடர்ந்து ஏப்ரல் 21 அன்று வெளியாகும் என அறிவித்தனர். ஆனால் இப்படம் நேற்று ஒரு சில காரணங்களால் வெளியாகவில்லை. இப்போது அனைத்து பிரச்சினைகளும் முடிவடைந்து இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. தமிழகமெங்கும் 250 திரையரங்குகளில் இந்த படம் இன்று வெளியானது.