லாக் டவுனை புறக்கணிக்கிறாரா அனுபமா பரமேஸ்வரன்? | மகேஷ்பாபு ரவீணா டாண்டன் குடும்பத்தினரின் குறுக்கீடு எதுவும் இல்லை ; இயக்குனர் அஜய் பூபதி | ஹீரோ ஆனார் ராம்கோபால் வர்மா | தர்மேந்திரா பிறந்தநாளில் ரசிகர்களின் பார்வைக்காக பண்ணை வீடு திறப்பு | தாயின் கருவில் இருந்தபோதே கேட்ட ஸ்லோகம் அது : பாலகிருஷ்ணா தகவல் | கேரளாவில் பம்பாய் பட 30ம் ஆண்டு கொண்டாட்டம் : மணிரத்னம் கலந்து கொள்கிறார் | சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை |

ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன் அடுத்து மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். அந்த வகையில் நாயகன் படத்துக்கு பிறகு மீண்டும் அவர்கள் இருவரும் கூட்டணி அமைக்கிறார்கள். முதன்முறையாக இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது இன்னொரு நாயகியாக ஆண்ட்ரியாவும் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு கமல் நடித்த விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 மற்றும் உத்தம வில்லன் ஆகிய மூன்று படங்களில் நடித்துள்ள ஆண்ட்ரியா இந்த படத்தின் மூலம் நான்காவது முறையாக மீண்டும் கமலுடன் இணையப்போகிறாராம்.




