காஞ்சனா 4ம் பாகத்தில் இணைந்த இளம் சீரியல் நடிகை | பாவ்னி - அமீருக்கு ஏப்., 20ல் டும் டும் | கேஜிஎப் 2வை 15 நிமிடத்துக்கு மேல் தொடர்ந்து பார்க்க முடியவில்லை : ராம்கோபால் வர்மா | எம்புரான் படத்தில் நடித்த பாலிவுட் நடிகைக்கு தினசரி மூன்று மணி நேரம் மேக்கப் | 2 வருடம் கழித்து ஓடிடியில் வெளியான மைக்கேல் படத்திற்கு வந்த சோதனை | மகேஷ்பாபுவின் மச்சினிச்சியை கிண்டலடித்த பரா கான் | இங்கிலாந்து திரைப்பட கல்லூரியில் பாடமாக எடுக்கப்பட்ட மம்முட்டியின் பிரம்மயுகம் | த்ரிஷா வீட்டிற்குப் புதிய வரவு இஸ்ஸி | தமிழில் கலக்க வரும் மராத்திய நடிகை | இளையராஜாவின் 'பேரன்பும் பெருங்கோபமும்' |
பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தமிழரசன். ரம்யா நம்பீசன், சோனு சூட், சுரேஷ்கோபி, ராதாரவி, யோகி பாபு, சங்கீதா, கஸ்தூரி, ரோபோ சங்கர், சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், சென்ட்ராயன், கும்கி அஸ்வின், முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இளையராஜா இசை அமைத்துள்ளார். எஸ்.என்.எஸ். மூவீஸ் தயாரித்துள்ளது.
கடந்தாண்டே ரிலீசுக்கு தயாரான இப்படம் பல ரிலீஸ் தேதிகள் அறிவித்தும் வெளியாகாமல் தள்ளி சென்றது. கடைசியாக நேற்று ஏப்ரல் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்தனர். ஆனால் இந்த முறையும் வெளியாகவில்லை. அதற்கு பதிலாக இன்னொரு புதிய ரிலீஸ் தேதியை போஸ்டருடன் அறிவித்துள்ளனர். அதன்படி இப்படம் அடுத்தவாரம் ஏப்ரல் 21ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர். இந்த முறையாவது ரிலீஸாகிவிடுமா...