சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

நடிகை பூஜா ஹெக்டே தற்போது தெலுங்கு, ஹிந்தி, தமிழ் போன்ற மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். இப்போது இவர் சல்மான் கானுக்கு ஜோடியாக கிஸி கி பாய் கிஸி கி ஜான் என்ற படத்தில் நடித்துள்ளார். தமிழில் அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்தின் ரீ-மேக்காக உருவாகி உள்ளது. சமீபத்தில் வெளியான இந்தப்பட டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் பூஜா ஹெக்டேவும், சல்மான் கான் இருவரும் டேட்டிங் செய்கின்றர். தீவிரமாக காதலித்து வருகின்றனர் என கிசுகிசு வந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனியார் ஊடகத்திற்கு பூஜா பேட்டி அளித்துள்ளார்.
அதில் பூஜா கூறியது "நான் யாரையும் காதலிக்கவில்லை. இப்போது என் கவனம் நடிப்பதில் மட்டும் தான். நான் சிங்கள் ஆக சந்தோஷமாக உள்ளேன்" என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.