ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

தமிழில் பாடகசாலை என்ற படத்தில் அறிமுகமான மலையாள நடிகை இனியா, அதையடுத்து வாகை சூடவா என்ற படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அப்படம் வெற்றி பெற்ற நிலையில் அடுத்தடுத்து மௌனகுரு, புலிவால், ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, கரையோரம் என பல படங்களில் நடித்தார்.
இந்நிலையில் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் வள்ளியின் வேலன் என்ற தொடரில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் இனியா. இந்த தொடரில் நடிக்கும் கவர்னர் வேடத்துக்காக நடுத்தர வயது பெண்மணியின் கெட்டப்புக்கு மாறி நடித்துள்ளார் இனியா. இதற்கு முன்பு சில மலையாள டிவி தொடர்களிலும் இனியா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




