உண்மை கதையில் யோகி பாபு | வெற்றி ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகை | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பும் ஷ்ரத்தா | 'மாமன்' சூரியின் கதை: இயக்குனர் தகவல் | பிளாஷ்பேக்: பல தலைமுறைகளை வாழ வைத்த 'மைடியர் குட்டிச்சாத்தான்' | பிளாஷ்பேக்: காதல் சின்னத்தை மீட்டெடுக்க விரும்பிய வி.என்.ஜானகி | மே 1 : சினிமா ரசிகர்களுக்காக பல வெளியீடுகள் | கவினின் 'டாடா' படம் ஓடிடி.,யில் எங்கே போனது? | ஓடிடி.,யில் விலை போகாத 'கேங்கர்ஸ்' | வேலை நாட்களில் எடுபடாத விஜய்யின் சச்சின் |
பா விஜய் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், ஜீவா, ராஷி கண்ணா, அர்ஜுன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'அகத்தியா'. பிப்ரவரி 28ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தில் இளையராஜாவின் இசையில் வெளிவந்த 'மூடுபனி' படத்திலிருந்து 'என் இனிய பொன்நிலாவே' பாடலை ரீமிக்ஸ் செய்து வெளியிட்டிருந்தார்கள்.
அப்பாடலின் உரிமை தங்களிடம் உள்ளது, அனுமதியில்லாமல் பயன்படுத்தி இருக்கிறார்கள் என சரிகம ஆடியோ நிறுவனம் படத் தயாரிப்பாளரான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் மீது டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது.
விசாரணையின் முடிவில் அப்பாடலை 'அகத்தியா' படத்தில் பயன்படுத்த நீதிமன்றத்தில் 30 லட்ச ரூபாய் செலுத்தினால் அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. பாடலுக்கான உரிமை சரிகம நிறுவனத்திடம் மட்டுமே உள்ளது. அதன் இசையமைப்பாளர் இளையராஜாவிடம் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
'அகத்தியா படத் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல், இப்பாடலுக்கான உரிமையை ஒரிஜனல் இசையமைப்பாளரான இளையராஜாவிடம் இருந்து வாங்கியதாக தெரிவித்திருந்தது. இரு தரப்பு ஆதாரங்களையும் ஆராய்ந்த நீதிமன்றம் மேற்கண்ட தீர்ப்பை அளித்துள்ளது.