கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார் தயாரிப்பில், கிருஷ்ஷன் பஞ்சு இயக்கத்தில், சிவாஜி கணேசன் அறிமுக நடிப்பில் 1952ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'பராசக்தி'.
அப்படத்தின் பெயரை சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடிக்கும் படத்திற்கு வைத்து அறிவிப்பு செய்தனர். அதே தினத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் 'சக்தித் திருமகன்' என்ற படத்திற்கு தெலுங்கில் 'பராசக்தி' எனப் பெயர் வைத்து அறிவித்தனர். இது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. இருவருமே வெவ்வேறு தயாரிப்பாளர் சங்கங்களில் அதற்கான பதிவுக் கடிதத்தையும் வெளியிட்டனர். 'பராசக்தி' தலைப்பை சிவகார்த்திகேயன் படத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதற்கான அனுமதியை ஏவிஎம் நிறுவனம் வழங்கியது. பின்னர் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் விஜய் ஆண்டனி அத்தலைப்பை விட்டுக் கொடுத்தார்.
இந்நிலையில் 1952ல் வெளிவந்த 'பராசக்தி' படத்தின் தயாரிப்பாளரான பெருமாள் முதலியார் பேரன் கார்த்திகேயன் அப்படத்தை டிஜிட்டல் வடிவில் மீண்டும் வெளியிட உள்ளோம். இப்படத்தை எங்களது தாத்தாதான் தயாரித்தார். ஏவிஎம் நிறுவனம் சில ஏரியாக்களின் வினியோக உரிமையை மட்டுமே பெற்றிருந்தது. இத்தலைப்பை வேறு யாரும் தங்களுடைய திரைப்படத் தலைப்பாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
அவர் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லவில்லை, தவிர்த்திட வேண்டும் என்றுதான் கேட்டுக் கொண்டுள்ளார். 'பராசக்தி' படப் பெயரை தொடர்ந்து சம்பந்தப்பட்ட சங்கங்களில் 'ரினீவல்' செய்து வந்தால் மட்டுமே அத்தலைப்பு அவர்கள் வசம் இருக்கும். மேலும் இந்திய அரசின் காப்பிரைட் சட்டத்தின்படி ஒரு படத்தின் உரிமை அதன் தயாரிப்பாளருக்கு 60 வருடங்கள் மட்டுமே சொந்தம். அதன்பின் அப்படத்தை யார் வேண்டுமானாலும் டிவிக்களிலோ, யு டியூப் சேனல்களிலோ போட்டுக் கொள்ளலாம். எனவே, 'பராசக்தி' படம் வெளிவந்து 73 வருடங்கள் ஆகிவிட்டதால் அதன் தலைப்பு மற்றும் உரிமை தயாரிப்பாளர் வசம் இருக்க வாய்ப்பில்லை.