ஆஸ்கர் 2022 : 6 விருதுகளை அள்ளிய டூன் ; சிறந்த நடிகர்கள் - வில் ஸ்மித், ஜெசிகா
28 மார், 2022 - 12:06 IST
உலகளவில் சினிமா துறைக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாக ஆஸ்கர் கருதப்படுகிறது. 2022ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. 94வது ஆஸ்கர் விருது விழாவில் சிகப்பு கம்பள வரவேற்பு நிகழ்வில் பிரபல நடிகர், நடிகைகள் கண்கவர் உடைகளை அணிந்து வந்து அலங்கரித்தனர். நிகழ்ச்சியை அமெரிக்காவின் பிரபல ஸ்டான்ட்-அப் காமெடியனான கிறிஸ் ராக் தொகுத்து வழங்கினார். 24 பிரிவுகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. இதில் டூன் படம் அதிகப்பட்சமாக 6 ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றது. சிறந்த படமாக கோடா தேர்வானது. சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை "ஜெசிகா சேஸ்டெய்ன்" தட்டிச் சென்றார். சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வில் ஸ்மித் தட்டிச் சென்றார்.
6 விருதுகளை அள்ளிய டூன்டெனிஸ் வில்லெனுவே இயக்கிய சயின்ஸ் பிக்சன் படமான டூன் ஆஸ்கர் 2022 போட்டியில் 10 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இவற்றில் சிறந்த ஒளிப்பதிவு, இசை, விஷூவல் எபெக்ட்ஸ், ஒரிஜினல் ஸ்கோர், படத்தொகுப்பு, புரொடக்சன் டிசைனிங் ஆகிய 6 பிரிவுகளில் 6 விருதுகளை அள்ளியது.
சிறந்த நடிகர் வில் ஸ்மித்பிரபல ஹாலிவுட் நடிகரான வில் ஸ்மித் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார். கிங் ரிச்சர்ட் என்ற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியமைக்காக இந்த விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த நடிகை ஜெசிகா சாஸ்டெய்ன்தி ஐஸ் ஆப் டாமி பே என்ற படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை ஜெசிகா சாஸ்டெய்ன் வென்றார்.
சிறந்த படம், இயக்குனர்சியான் ஹெடர் இயக்கத்தில் வெளியான காமெடி படமான கோடா சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது. தி பவர் ஆப் தி டாக் என்ற படத்தை இயக்கிய ஜேன் கேம்பியன் சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதை வென்றார்.
மற்ற ஆஸ்கர் விருது வென்றபவர்கள் விபரம்சிறந்த துணை நடிகர்: ட்ராய் கோட்சூர் (படம் : கோடா)
சிறந்த துணை நடிகை: அரியானா டிபோஸ் (படம் : வெஸ்ட் சைட் ஸ்டோரி)
சிறந்த அசல் திரைக்கதை: கென்னத் பிரானாக் (படம் : பெல்பாஸ்ட்)
சிறந்த தழுவல் திரைக்கதை: சியான் ஹெடர் (படம் : கோடா)
சிறந்த வெளிநாட்டு திரைப்படம் : டிரைவ் மை கார் (ஜப்பான்)
சிறந்த ஆடை வடிவமைப்பு : ஜென்னி பியாவன் (படம் : குரூலலா)
சிறந்த இசை : மேக் ரூத், மார்க் மங்கினி, தியோ கிரீன், டக் ஹெம்பில் மற்றும் ரான் பார்ட்லெட் (படம் : டூன்)
சிறந்த ஒளிப்பதிவு : கிரேக் பிரேசர் (டூன்)
சிறந்த படத்தொகுப்பு : ஜோ வாக்கர் (படம் : டூன்)
சிறந்த அனிமேஷன் படம் : என்கான்டோ
சிறந்த அனிமேஷன் குறும்படம் : தி விண்ட்ஷீல்ட் வைபர்
சிறந்த பாடல் : நோ டைம் டூ டை (படம் : நோ டைம் டூ டை)
சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் : 4 பேர் (படம் : டூன்)
சிறந்த சிகை அலங்காரம் : படம் - தி ஐஸ் ஆப் டேமி பயஸ்
சிறந்த ஆவணப்படம் : தி குயின் ஆப் பாஸ்கெட்பால்
சிறந்த ஒலிக்கலவை : ஹன்ஸ் ஜிம்மர் (படம் : டூன்)
சிறந்த தயாரிப்பு நிர்வாகம் : டூன் படம்