அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் | காதலில் விழுந்தாரா 'காந்தா' நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் |

சிவா இயக்கத்தில், இமான் இசையமைப்பில், ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி மற்றும் பலர் நடிக்கும் படம் 'அண்ணாத்த'.. இப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை பிரபல டிஜிட்டல் நிறுவனமான கியூப் சினிமா வாங்கி உள்ளது.
அமெரிக்காவில் மட்டும் இப்படத்தை சுமார் 300 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அமெரிக்காவில் நவம்பர் 3ம் தேதி மாலையே இப்படத்தின் பிரிமீயர் காட்சிகள் திரையிடப்பட உள்ளன. இதற்காக தியேட்டர்களை புக் செய்யும் பணிகள் ஏற்கெனவே ஆரம்பமாகியுள்ளன.
அதற்காக டிக்கெட் கட்டணமாக பெரியவர்களுக்கு 20 டாலர், சிறியவர்களுக்கு 15 டாலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4ம் தேதியன்று பெரியவர்களுக்கு 16 டாலர், சிறியவர்களுக்கு 12 டாலர் கொடுக்க வேண்டும். எக்ஸ்டி தியேட்டர் என்றால் 3 டாலர் கூடுதல் கட்டணம்.
'அண்ணாத்த' படத்தின் தெலுங்கு டப்பிங்கான 'பெத்தண்ணா' படத்திற்கு நவம்பர் 3ம் தேதி பெரியவர்களுக்கு 15 டாலர், சிறியவர்களுக்கு 10 டாலர், நம்வபர் 4ம் தேதி பெரியவர்களுக்கு 12 டாலர், சிறியவர்களுக்கு 9 டாலர் என கட்டணம் வைத்துள்ளார்கள்.
இது வழக்கமான கட்டணங்களை விட கூடுதல் தொகை என்கிறார்கள். 20 டாலர் கட்டணம் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் 1400 ரூபாய். இருந்தாலும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் அவ்வளவு தொகை கொடுத்து படத்தைப் பார்க்கத் தயாராக இருக்கிறார்களாம்.
தமிழகத்திலேயே அதிகாலை காட்சிக்கு அனுமதி கொடுக்கப்பட்டால் 1000, 2000 வரை கட்டணம் போகும் என்கிறார்கள். 'பேட்ட, தர்பார்' ஆகிய படங்களின் சிறப்புக் காட்சி கட்டணம் 1000 ரூபாய் வரை விற்கப்பட்டது.