நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சமீபகாலமாக மலையாள சினிமாவில் சூப்பர் ஹிட்டான படங்கள் தமிழ், தெலுங்கில் ரீமேக் ஆகி வருவதைப்போன்று மலையாள நடிகர்கள் தமிழ், தெலுங்கு படங்களில் பரவலாக நடித்து வருகிறார்கள். அந்த வகையில், தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடித்த ஜனதா கேரேஜ் படத்தில் மோகன் லால் நடித்தார். அதையடுத்து யாத்ரா படத்தில் மம்மூட்டி நடித்தார். பின்னர் பாகமதி, ஆல வைலகுந்தபுரம்லு படங்களில் ஜெயராம் நடித்தார். தற்போது பகத் பாசில் புஷ்பா படத்தில் நடித்து வருகிறார். துல்கர்சல்மான் சில தெலுங்கு படங்களில நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிருத்விராஜூம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார். தற்போது பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தில் ஒரு முக்கிய கீ ரோலில் அவர் நடிக்கிறாராம். அதுகுறித்த தகவல் டோலிவுட்டில் வெளியாகியுள்ளது.