எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான் - காதலை உறுதி செய்த ராஷ்மிகா | கேம் சேஞ்சர் படத்திற்காக 15 கோடியில் படமாக்கப்பட்ட பிரம்மாண்ட பாடல் | பணி படம் பார்த்துவிட்டு ஜோஜூ ஜார்ஜை பாராட்டிய கமல் | 'விசில் போடு' சாதனையை முறியடிக்குமா 'கிஸ்ஸிக்'? | தமிழ் சினிமாவின் 1000 கோடி கனவு…அடுத்த ஆண்டாவது நடக்குமா? | 4வது திருமணத்திற்கு பின் கொச்சியை விட்டு வைக்கம் இடம் பெயர்ந்த நடிகர் பாலா | எம்புரான் செட்டுக்கு விசிட் அடித்த ராம்கோபால் வர்மா | நவம்பர் 29ல் 9 படங்கள் ரிலீஸ் | கோவாவில் தெருவோர கடைக்காரரிடம் சண்டை போட்ட ‛ஜெயிலர்' வில்லன் | பிளாஷ்பேக்: நடிப்பில் சாதித்து, தயாரிப்பு, இயக்கத்தில் சரிவை சந்தித்த 'நடிகையர் திலகம்' சாவித்திரி |
கொரோனா தாக்கம் காரணமாக கடந்த வருடம் குறைவான படங்களே வெளியாகி இருந்தாலும் கூட, வழக்கம்போல 2020ம் வருடத்திற்கான 51வது கேரள அரசு விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகராக ஜெயசூர்யா மற்றும் சிறந்த நடிகையாக அன்னா பென் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த படமாக தி கிரேட் இண்டியன் கிச்சன் படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விருது பெற்றவர்கள் முழு விபரம் வருமாறு:
சிறந்த திரைப்படம் ; தி கிரேட் இண்டியன் கிச்சன் (இயக்குனர் - ஜியோ பேபி)
சிறந்த இயக்குனர் ; சித்தார்த் சிவா (என்னிவர்)
சிறந்த நடிகர் ; ஜெயசூர்யா (வெள்ளம்)
சிறந்த நடிகை ; அன்னா பென் (கப்பேலா)
சிறந்த 2-வது திரைப்படம் ; திங்களாழ்ச்சே நிச்சயம்
சிறந்த பாப்புலர் திரைப்படம் ; (அய்யப்பனும் கோஷியும்)
சிறந்த குணச்சித்திர நடிகர் ; சுதீஷ் (என்னிவர்,பூமியிலே மனோகர ஸ்வர்க்கம்)
சிறந்த குணச்சித்திர நடிகை ; ஸ்ரீரேகா (வெயில்)
சிறந்த அறிமுக இயக்குனர் ; முகமது முஸ்தபா (கப்பேலா)
சிறந்த கதை ; சென்னா ஹெக்டே (திங்களாழ்ச்சே நிச்சயம்)
சிறந்த திரைக்கதை (ஒரிஜினல்) - ஜியோ பேபி (தி கிரேட் இண்டியன் கிச்சன்)
சிறந்த படத்தொகுப்பாளர் ; மகேஷ் நாராயணன் (சி யூ சூன்)
சிறந்த ஒளிப்பதிவாளர் ; சந்துரு செல்வராஜ் (காயாட்டம்)
சிறந்த இசையமைப்பாளர் ; எம்.ஜெயச்சந்திரன் (சூபியும் சுஜாதையும்)
சிறந்த பின்னணி இசை ; எம்.ஜெயச்சந்திரன் (சூபியும் சுஜாதையும்)
சிறந்த கலை இயக்குனர் ; சந்தோஷ் ராமன் (பியாலி, மாலிக்)
சிறந்த குழந்தைகள் திரைப்படம் ; போனமி ( இயக்குனர்-டோனி சுகுமார்)
சிறந்த குழந்தை நட்சத்திரம் (ஆண்) ; நிரஞ்சன் (காசிமிண்டே கடல்)
சிறந்த குழந்தை நட்சத்திரம் (பெண்) ; ஆரவ்யா சர்மா (பியாலி)
சிறந்த பெண் (ஏதோ ஒரு பிரிவில்) ; நஞ்சியம்மா (பாடகி- கலக்காத்தா பாடல் - அய்யப்பனும் கோஷியும்)
சிறந்த நடிகர் (ஜூரி பரிந்துரை) - சிஜி பிரதீப் (பாரதப்புழா)
சிறந்த பாடகர் ; ஷஹபாஸ் அமன் (சுந்தரனாயவனே - ஹலால் லவ் ஸ்டோரி மற்றும் ஆகாசமாயவள் - வெள்ளம்)
சிறந்த பாடகி ; நித்யா மம்மென் (வாதிக்கலு வெள்ளரிப்பிறாவு - சூபியும் சுஜாதையும்)
சிறந்த பாடலாசிரியர் ; அன்வர் அலி (ஸ்மரனைகள் காடாய் - பூமியிலே மனோகர ஸ்வர்க்கம்)
சிறந்த சிங்க் சவுண்ட் ; ஆதர்ஷ் ஜோசப் செரியன் (சந்தோஷத்திண்டே ஒண்ணாம் ரகசியம்)
சிறந்த சவுண்ட் மிக்ஸிங் ; அஜித் ஆப்ரஹாம் ஜார்ஜ் (சூபியும் சுஜாதையும்)
சிறந்த சவுண்ட் டிசைனிங் ; டோனி பாபு (தி கிரேட் இண்டியன் கிச்சன்)