ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
கொரோனா தாக்கம் காரணமாக கேரளாவில் படப்பிடிப்பு நடத்த சில மாதங்களாக கடுமையான நிபந்தனையுடன் அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து கேரளா திரையுலகம் பரபரப்பாகியுள்ளது. அந்தவகையில் திலீப் நடிக்கும் 'வாய்ஸ் ஆப் சத்தியநாதன்' என்கிற படத்தின் படப்பிப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் துவங்கியுள்ளது.
பிரபல இயக்குனரும் திலீப்பின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருப்பவருமான ரபி (மெக்கார்டின்) இந்தப்படத்தை இயக்குகிறார். தமிழில் சரத்குமார் நடித்த தென்காசி பட்டணம் படத்தை இயக்கியவர் இவர் தான். மேலும் திலீப்-கீர்த்தி சுரேஷ் நடித்த ரிங் மாஸ்டர் மற்றும் 2 கண்ட்ரீஸ் படங்களை தொடர்ந்து 'வாய்ஸ் ஆப் சத்தியநாதன்' படத்தில் மீண்டும் திலீப்புடன் கூட்டணி அமைத்துள்ளார் ரபி. இதில் திலீப்புக்கு ஜோடியாக வீணா நந்தகுமார் நடிக்கிறார்.